Pages

Thursday, November 24, 2011

Friday, November 25, 2011 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம்பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய கோரிக்கை

அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனங்களை ஏற்கனவே உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என வேலையில்லா பி.எட்.பட்டதாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் 5,869 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 15,525 பட்டதாரி ஆசிரியர்கள், 7,907 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட 57 ஆயிரம் பேர்களை நியமனம் செய்ய இருக்கிறது. அதிகப்படியான ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். படித்து அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த பட்டதாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேற்கண்ட ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் சென்ற ஆட்சியின் போது வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமையின் படிதான் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யும் போது எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பு கிடையாது. இதனையெல்லாம் தவிர்த்து தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டால் எண்ணற்ற பயிற்சி வகுப்புகள் புற்றீசல்கள் போல் தோன்றி பட்டதாரிகளிடம் கொள்ளை லாபம் சம்பாதிக்க வாய்ப்பும், இதனை பயன்படுத்தி பி.எட். கல்லூரிகள் நடத்தும் தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிகப்படியான பணத்தை பிடுங்கும் அவல நிலைகள் தொடரும்.மேலும் எந்தவிதமான அனுபவமும், திறமையில்லாத பி.எட். படித்தவுடன் வெளியேறும் பட்டதாரிகளே அதிகமாக தேர்வு செய்யப்படும் நிலை ஏற்படும். இதனால் வகுப்பறையில் நன்றாக பாடம் நடத்த முடியாத பரிதாப நிலை தான் ஏற்படும். எனவே திறமையான அனைத்து வகையான பண்புகளையும் பயிற்சி முறைகளையும் பெற்றுள்ள ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.எனவே படித்து முடித்து 10,15 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கும் பி.எட். படித்தவர்களை வேலைவாய்ப்பு பதிவுமூப்பு முறையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என அரசுக்கு வேலையில்லா பி.எட்.பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெ2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கால அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, நவ.25-


கடந்த 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஆசிரியர் தகுதித்தேர்வு


மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை தொடர்ந்து ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை கொண்டுவந்து இருக்கிறது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வு முக்கிய அம்சம் ஆகும். அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வகுத்துள்ள விதிமுறைகளின்படி உருவாக்கப்படும் இந்த தகுதித்தேர்வை நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் தனித்தனியே தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில் 60 சதவீத மதிப்பெண் அதாவது, 90 மதிப்பெண்கள் (தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 150) பெற்றால்தான் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.


ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு பொருந்துமா?


இந்த புதிய நடைமுறை ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பொருந்துமா? என்று கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பான விளக்கம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


இலவச கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, 1.4.2010-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதி 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதேபோல், தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் 5 ஆண்டுகளில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தேர்வை எழுதலாம். தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பினாலும் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளலாம்.


நெகட்டிவ் மார்க் கிடையாது


மொத்தம் 150 கேள்விகள் கொண்ட இந்த தகுதித்தேர்வில் ஆப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். அதாவது ஒரு வினாவுக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். தவறாக விடை அளித்தால் எவ்வித மைனஸ் மார்க் எதுவும் கிடையாது.


இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கொண்டுவரப்படுவதால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும். இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே உதவி பெறும் பள்ளிகளிலும் பணியில் அமர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


கல்வியாளர்கள் வரவேற்பு


தற்போது கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு யு.ஜி.சி. நடத்தும் தேசிய அளவிலான `நெட்' (நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) அல்லது மாநில அளவிலான `ஸ்லெட்' தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பி.எச்டி. பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரி ஆசிரியர் பதவிக்கு இருப்பதைப் போன்று பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கொண்டு வந்திருப்பதை மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளார்கள்.


இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதால் தகுதி படைத்த பி.எட். பட்டதாரிகள் மட்டுமே ஆசிரியர் பணியில் நுழைய முடியும். ``ஏதோ பி.எட். படித்தோம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வைத்தோம். என்றைக்காவது ஒருநாள் ஆசிரியர் வேலை கிடைக்கும்'' என்ற மனோபாவம் உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.